நிலத்தடி நீர்பிரிவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நிலத்தடி நீர்பிரிவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T02:23:16+05:30)

பணி நிரந்தரம் கோரி நிலத்தடி நீர்பிரிவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி

புதுவை வேளாண்துறை மாநில நிலத்தடி நீர் பிரிவில் ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் சுமார் 25 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் காரைக்காலுக்கு சென்று பணியாற்றுமாறு நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் காரைக்கால் செல்ல பயணப்படி மற்றும் தினப்படி வழங்கவும் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து நிலத்தடிநீர் பிரிவு ஊழியர்கள் நேற்று அலுவலக வளாக பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story