குடிபோதையில் தாயாரை தாக்கியதால் தந்தையை கொன்ற வாலிபர் போலீசார் கைது செய்து விசாரணை


குடிபோதையில் தாயாரை தாக்கியதால் தந்தையை கொன்ற வாலிபர் போலீசார் கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 1 March 2017 3:45 AM IST (Updated: 28 Feb 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தாயாரை தாக்கிய தந்தையை வாலிபர் அடித்துக் கொன்றார்.

ராமேசுவரம்,

மீனவர்

ராமேசுவரம் அருகே உள்ள சேராங்கோட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல். மீனவர். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களது மகன் நம்புவேல்(வயது 32). இவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

சக்திவேல் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியை தாக்கி உள்ளார். இதுகுறித்து பஞ்சவர்ணம் தனது மகனிடம் கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று சக்திவேல் மது அருந்தி விட்டு பஞ்சவர்ணத்தை தாக்கினார்.

தாக்கினார்

அப்போது வீட்டுக்கு சென்ற நம்புவேலிடம், சக்திவேல் தாக்கியது குறித்து பஞ்சவர்ணம் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்புவேல், தனது தந்தை சக்திவேலை தாக்கி கீழே தள்ளி உள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த அவரை உடனடியாக ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சக்திவேல் இறந்தார். இதுகுறித்து துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நம்புவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story