வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கியது
விருதுநகர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் 80 சதவீதம் ஊழியர்கள்
விருதுநகர்,
அறிவிப்புநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். வங்கி பணிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. வாரக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகளை பொறுப்பு ஏற்க வற்புறுத்தக்கூடாது. வங்கி ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்து இருந்தது.
வேலை நிறுத்தம்இதனை யொட்டி விருதுநகர் மாவட்டத்தில் 220 வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தன. மொத்தமுள்ள 1,390 ஊழியர்களில் 1,165 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதில் 420 பேர் பெண்கள். ஒரு சில தனியார் வங்கி கிளைகள் மட்டும் செயல்பட்டன. அரசு வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் செயல்படவில்லை.
மாவட்டம் முழுவதும் 80 சதவீத வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கியது. வணிகநகரான விருதுநகரில் வணிக நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டது.