பரிகம் காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்


பரிகம் காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேர் கைது நாட்டு துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 28 Feb 2017 8:39 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி வனச்சரகம் பரிகம் காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு

தர்மபுரி,

தர்மபுரி வனச்சரகம் பரிகம் காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட 3 பேர் செல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தர்மபுரி வனச்சரக அலுவலர் ராஜலிங்கம் உத்தரவின் பேரில் வனவர் காண்டீபன் தலைமையில் வனவர் கிருஷ்ணன், வனக்காப்பாளர் ராஜேந்திரன், வனக்காவலர் சின்னபொண்ணு ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிகம் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியுடன் 3 பேர் வனப்பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நல்லம்பள்ளி அருகே உள்ள மேற்கத்தியன் கொட்டாயை சேர்ந்த பாலகிருஷ்ணன், மாரிமுத்து, கரியன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த இடும்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


Next Story