தி.மு.க. சார்பில் சென்னையில் உலக மகளிர் தின கருத்தரங்கு
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,

உலக மகளிர் தினமான வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் உலக மகளிர் தின கருத்தரங்கம் நடைபெறுகிறது. வக்கீல் சாந்தகுமாரி, மருத்துவர் எழிலன், வக்கீல் ஆதிலட்சுமி லோகமூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் இக்கருத்தரங்கத்தில் பேசுகிறார்கள்.
தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரசார குழு மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கழக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கம் மற்றும் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரசார குழு நிர்வாகிகள் மற்றும் கழக மகளிர் அணியினர் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு கனிமொழி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story