39 வருட பணி நிறைவு: ராணுவ அதிகாரி பாபி மேத்யூஸ் ஓய்வு


39 வருட பணி நிறைவு: ராணுவ அதிகாரி பாபி மேத்யூஸ் ஓய்வு
x
தினத்தந்தி 1 March 2017 4:50 AM IST (Updated: 1 March 2017 4:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் (ஓ.டி.ஏ.) தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த லெப்டினென்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ் நேற்று ஓய்வு பெற்றார்.

சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் (ஓ.டி.ஏ.) தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த லெப்டினென்ட் ஜெனரல் பாபி மேத்யூஸ் நேற்று ஓய்வு பெற்றார். இதன் மூலம் தனது 39 வருட ராணுவ பணியில் அவர் நிறைவு பெற்று உள்ளார்.

பாபி மேத்யூஸ் தனது பரம்பரையில் 2-ம் தலைமுறை ராணுவ அதிகாரி ஆவார். ‘பெரர்’ எனும் இந்திய ராணுவத்தின் பழமையான பட்டாலியன் பிரிவில் 1978-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். ராணுவ தலைமையகத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் பதவி வகித்திருக்கிறார். ‘விஷிஷ்ட் சேவா’, ‘அதி விஷிஷ்ட் சேவா’, ‘பார்-அடி விஷிஷ்ட் சேவா’, ‘பரம் விஷிஷ்ட் சேவா’ உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பயிற்சி மைய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பாபி மேத்யூஸ், பல்வேறு சிறப்பான பணிகளுக்கு வித்திட்டு இருக்கிறார். இந்த நிலையில் ராணுவ பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஓ.டி.ஏ.வின் 17 மாத பணி முடிவடைந்து விட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று ஓ.டி.ஏ.வில் திறந்த ஜீப்பில் பாபி மேத்யூசை ஏற்றி, ஜீப்பின் இருபுறமும் கயிறு கட்டி ராணுவ அதிகாரிகள் இழுத்து பாரம்பரிய முறைப்படி வழியனுப்பினர். 

Next Story