பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைப்பு
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 100 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 195 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியின் நீர் மட்டம் 24.8 அடியாக உள்ளது. 818 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 195 கனஅடி தண்ணீரும், சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படு கிறது.

Next Story