பேரம்பாக்கம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு


பேரம்பாக்கம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 March 2017 4:52 AM IST (Updated: 1 March 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்,

பேரம்பாக்கம் அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கத்திக்குத்து

பேரம்பாக்கத்தை அடுத்த வேப்பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரதன் வேப்பஞ்செட்டி ரேஷன் கடை அருகே சென்றபோது அங்கிருந்த வினோத்குமார் ஏற்கனவே இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது சகோதரர் சிவா, தந்தை பார்த்தசாரதி ஆகியோருடன் சேர்ந்து வரதனை தகாத வார்த்தையால் பேசி கையால் அடித்து உதைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

வலைவீச்சு

இதில் காயம் அடைந்த வரதன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வரதனின் மனைவி செல்வி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பார்த்தசாரதி, வினோத்குமார், சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story