சமூக வலைதளத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பற்றி அவதூறு பரப்பிய வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் பெண் சப்-இன்ஸ்பெக் டர் பற்றி அவதூறு பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
சமூக வலைதளத்தில் பெண் சப்-இன்ஸ்பெக் டர் பற்றி அவதூறு பரப்பியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பற்றி அவதூறு
திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராக்கிகுமாரி. சமூக வலைதளமான ‘பேஸ்-புக்’கில், மர்மநபர் ஒருவர், ராக்கிகுமாரியின் படத்தை போட்டு, ‘புகாருக்கு ரூ.3 ஆயிரம் மட்டுமே லஞ்சம் வாங்கி முதலிடம் பிடித்த இவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்க ஷேர் பண்ணுங்க’ என்று பதிவிடப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராக்கிகுமாரி, தன்னை பற்றி அவதூறு பரப்பும் நபரை கைது செய்யக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
வாலிபர் கைது
விசாரணையில், அவதூறு பரப்பியவர் திருவள்ளூரை அடுத்த பழைய திருப்பாச்சூர் கோட்டை காலனியைச் சேர்ந்த ராஜன் (வயது 34) என்பது தெரியவந்தது. திருவள்ளூர் அருகே மண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக ராஜன் வேலை பார்த்து வந்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ஆத்திரம்
எனது மாமியார் மற்றும் மச்சானுக்கு இடையே வீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக நாங்கள் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றோம்.
இந்த வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி எங்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை பற்றி ‘பேஸ்புக்’கில் அவதூறாக பரப்ப வேண்டும் என நினைத்தேன்.
ராக்கிகுமாரியின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் இருந்து போலீஸ் சீருடையில் இருந்த படத்தை எடுத்து அதன் மீது அவரைப்பற்றி அவதூறாக பதிவிட்டேன். பின்னர் அதனை அழித்து விட்டேன். ஆனால் போலீசார் எப்படியோ கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான ராஜனை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story