பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வங்கி துறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வங்கி ஊழியர்களின் அடுத்த கட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 77 வங்கிகளை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 739 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கி பணிகள் அனைத்தும் முடங்கின.

Next Story