ரோடியர் மில்லை இயக்கிட மத்திய அரசிடம் ரூ.500 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை


ரோடியர் மில்லை இயக்கிட மத்திய அரசிடம்  ரூ.500 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 1 March 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

ரோடியர் மில்லை திறந்து மீண்டும் இயக்கிட மத்திய அரசிடம் ரூ.500 கோடி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுவை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாலை பாதுகாப்பு மாநாடு

புதுவை ரோடியர் பஞ்சாலை பாதுகாப்பு மாநாடு முதலியார்பேட்டையில் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் ரவி, ரங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டு மலரை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விசுவநாதன் வெளியிட முன்னாள் எம்.பி. ராமதாஸ் பெற்றுக்கொண்டார்.

மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் நாரா.கலைநாதன், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சலீம், சேதுசெல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ரூ.500 கோடி

*ரோடியர் மில்லை திறந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளத்துடன் வேலை வழங்கவேண்டும்.

*இலவச துணிகள், பள்ளி சீருடை ஆர்டர்கள் அனைத்தையும் ரோடியர் பஞ்சாலைக்கே தரவேண்டும்.

*ரோடியர் மில்லை மீண்டும் இயக்க மத்திய அரசிடம் ரூ.500 கோடி பெற முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*பிரெஞ்சிந்திய ஒப்பந்தப்படி பிரான்ஸ் அரசிடம் உதவிபெற முயற்சிக்கவேண்டும்.

*ரோடியர், பாரதி, சுதேசி மில்களை இணைத்து ஜவுளி பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கவேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story