வேடிக்கை காட்டிய போது பாம்பு கடித்து 12-ம் வகுப்பு மாணவர் சாவு தேர்வு எழுத இருந்த நேரத்தில் துயரம்
வசாயில், வேடிக்கை காட்டிய போது பாம்பு கடித்து 12-ம் வகுப்பு மாணவர் பலியானார். தேர்வு எழுத இருந்த நேரத்தில் அவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.
மும்பை,

மாணவர்
பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் முகமது அவேஜ் (வயது17). பாம்புகள் பிடிப்பதில் ஆர்வமுடையவர். வீடுகளில் பாம்பு புகுந்து விட்டால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை தான் அழைப்பார்கள்.
சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டிற்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும் முகமது அவேஜ் அங்கு சென்று அந்த பாம்பை லாவகமாக தனது கையால் பிடித்தார்.
சாவு
அதை பார்ப்பதற்காக கூட்டம் அங்கு திரண்டு இருந்ததால் பாம்பை வைத்து முகமது அவேஜ் வேடிக்கை காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு முகமது அவேஜின் கையில் கடித்து விட்டது. இதனால் வேதனையில் துடித்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12-ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த நேரத்தில் பாம்பு கடித்து இந்த துயரம் நேர்ந்து விட்டது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story