ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் தர்ணா
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தர்ணா
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிடும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனே இந்த திட்டத்தை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தியும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல தஞ்சை சரபோஜி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார். காலை 8.30 மணி முதல் 10 மணி வரை இந்த தர்ணா நடைபெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு மாணவர்கள் வகுப்பிற்கு சென்றுவிட்டனர்.
மாணவர்கள் கருத்து
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது:-
பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகஅரசு தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீரை வழங்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. சம்பா சாகுபடி செய்தும் போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் எல்லாம் கருகி விட்டன. இதை பார்த்து மனவேதனையில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்தநிலையில் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் விதமாக மீத்தேன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் மத்தியஅரசு செயல்படுத்த முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்தை பல்வேறு அமைப்பினர் போராடி தடுத்து நிறுத்தினர். ஆனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் இயற்கை எரிவாயுவை எடுக்க மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மத்தியஅரசு அளிக்கும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். தடைவிதிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டிற்காக எப்படி ஒற்றுமையாக போராடி, மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தோமோ, அதேபோல இந்த திட்டத்தை விரட்டி அடிக்க ஒன்று கூடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story