பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 1 March 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். கீழப்பழுவூர், கீழகாவட்டாங் குறிச்சி, இலந்தைகூடம், திருமழபாடி, திருமானூர், கீழகொளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 538 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செல்வராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசன், குமரவேல் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனிடம் புள்ளம்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் நதிகள் இணைப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பட்டியலில் புள்ளம்பாடி வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகளின் பெயர் விடுபட்டு உள்ளதாகவும், எனவே அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர். 

Next Story