பெரம்பலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் முரளி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,
கடும் வறட்சி
பெரம்பலூர் நகராட்சியில் தற்போது சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் தாளக்குடி கொள்ளிடம் ஆற்றில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்படி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் காவிரி குடிநீரானது நகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவற்றில் சேமித்து வைக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
பருவமழை பொய்த்து போனதால் கடந்த 144 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் காவிரி குடிநீர் குறைந்த அளவே பெறப்பட்டு பெரம்பலூர் நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர உப்புஓடை கிணறு, துறைமங்கலம் ஏரி கிணறு, ஆலம்பாடி பிரிவு ரோட்டில் உள்ள கிணறு உள்பட நகராட்சிக்கு சொந்தமான 25 கிணறுகளில் உள்ள நீரின் தன்மை பரிசோதிக்கப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க...
இந்த நிலையில் கோடை காலம் நெருங்கி வருவதையொட்டி குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலை துறைமங்கலம் ஏரி பகுதியிலும், 4-வது வார்டு அசோக்நகர் பகுதியிலும் நகராட்சி சார்பில் புதிதாக 2 கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட இந்த கிணறுகளில் ஊற்று நீர் வருகிறது. விரைவில் கிணறுகள் அமைக்கும் பணியை நிறைவு செய்து இங்கிருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் பெரம்பலூர் நகராட்சியில் தெரு குழாய்கள் மூலமாகவும், ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீரை குடிநீர் தொட்டிகளில் சேமித்து வைத்தும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்த குடிநீர் தொட்டி மற்றும் தெரு குழாய்களை சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. உப்புஓடை கிணறு உள்ளிட்ட சில கிணறுகளை ஆழப்படுத்தி ஊற்று நீரை அதிகப்படியாக பெறும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நகராட்சி ஆணையர்
இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் முரளி கூறுகையில், வறட்சியின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்து வருவது கவலை அளிக்கிறது. காவிரி குடிநீர் மற்றும் நகராட்சி கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவிரி குடிநீர் இணைப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு வீணாக நீர் வெளியேறுவது, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து 04328-225885 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
முன்னதாக குடிநீர் கிணறு தோண்டும் பணிகள் மற்றும் நகராட்சி குடிநீர் கிணறுகளை ஆழப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றை நகராட்சி ஆணையர் முரளி, நகராட்சி பொறியாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story