கல்வி அலுவலர் அலுவலகத்தில் தமிழாசிரியர் உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் டி.என்.டி.டி.ஏ. அபிஷேகநாதர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் ஆத்திமுத்து அருமைநாயகம். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் குறுகால்பேரியில் உள்ள டி.என்.டி.டி.ஏ பள்ளிக்கூடத்தில் இருந்து பணியிட மாறுதல் பெற்று குலையன்கரிசல் பள்ளிக்கூடத்துக்கு வந்தார். ஆனால் இந்த பணியிட மாறுதலுக்கான ஒப்புதலை மாவட்ட கல்வி அலுவலர் இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் ஆத்திமுத்து அருமைநாயகத்துக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் ஆத்திமுத்து அருமைநாயகம் நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனது பணியிட மாறுதலுக்கு ஒப்புதல் அளித்து, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அலுவலகத்தின் உள்பகுதியில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் செந்தூர்கனி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

Next Story