இ.எஸ்.ஐ. குறைதீர்க்கும் முகாம்
நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை,
தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ) நெல்லை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் முகாம் வருகிற 8–ந் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லை துணை மண்டலத்தில் நடைபெற உள்ளது. முகாமில் மருத்துவ கண்காணிப்பு அதிகாரி, துணை மண்டல இயக்குனர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 1800 425 1505 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை, இ.எஸ்.ஐ. குறை தீர்க்கும் அதிகாரி பூ.சத்தியவாசகம் தெரிவித்துள்ளார்.