மகள் இறந்த துக்கத்தில் ரெயிலில் பாய்ந்து தாய் தற்கொலை நாசரேத் அருகே பரிதாபம்
நாசரேத் அருகே மகள் இறந்த துக்கத்தில் ரெயிலில் பாய்ந்து, தாய் தற்கொலை செய்து கொண்டார்.
நாசரேத்,
நாசரேத் அருகே மகள் இறந்த துக்கத்தில் ரெயிலில் பாய்ந்து, தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மகள் இறந்த துக்கத்தில்...தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தெற்கு தெருவை சேர்ந்தவர் பகத்சிங். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அமிர்தவல்லி (வயது 56). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகன், சென்னையில் மளிகை கடை நடத்தி வருகிறார். மகள், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
இதனால் அமிர்தவல்லி மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று மாலை 5 மணி அளவில் மூக்குப்பீறி நான்கு கம்பி ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது.
ரெயிலில் பாய்ந்தார்ரெயில்வே கேட்டில் இருந்து சிறிது தொலைவு அமிர்தவல்லி நடந்து சென்றார். பின்னர் ரெயில் அருகில் வந்ததும் அவர் திடீரென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அமிர்தவல்லி சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில்வே கேட் கீப்பர், நாசரேத் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து தகவல் கிடைத்தவுடன் நெல்லை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அமிர்தவல்லியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் இறந்த துக்கத்தில் தாய் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.