ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் 6-ந் தேதி முதல் வினியோகம் விண்ணப்பிக்க 23-ந் தேதி கடைசி நாள்
நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற 6–ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வருகிற 6–ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 23–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள்–2 முறையே ஏப்ரல் மாதம் 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நெல்லை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் வருகிற 6–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 22–ந் தேதி வரையுள்ள நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளது.
விற்பனை மையங்கள் தொடர்பாக, மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் காணலாம். ஒரு விண்ணப்ப கட்டணம் ரூ.50–ஐ தொகையாக அளித்து விற்பனை மையங்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள்–1 மற்றும் தாள்–2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விற்பனை மையங்கள்1. புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, மெயின் ரோடு–அம்பாசமுத்திரம், 2. அரோமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மெயின் ரோடு–அம்பாசமுத்திரம், 3. புனித யோவான் மேல்நிலைப்பள்ளி–வீரவநல்லூர், 4. அரசு மேல்நிலைப்பள்ளி–பத்தமடை, 5. அரசு மேல்நிலைப்பள்ளி–முதலியார்பட்டி, 6. திருகைலாசம் நினைவு உயர்நிலைப்பள்ளி–திருமலையப்பபுரம், 7. கோமதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி–களக்காடு, 8. அரசு மேல்நிலைப்பள்ளி–ஏர்வாடி, 9. அரசு உயர்நிலைப்பள்ளி–நாங்குநேரி, 10. அரசு மேல்நிலைப்பள்ளி–முனைஞ்சிப்பட்டி.
11. அரசு மேல்நிலைப்பள்ளி– பொதுக்குடி, 12. அரசு மேல்நிலைப்பள்ளி–வடக்கு அரியநாயகிபுரம், 13. உதவி தொடக்க கல்வி அலுவலர், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி வளாகம், வடக்கு ரதவீதி, பஸ்நிலையம் அருகில்–ராதாபுரம், 14. சமாரியா புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குலசேகரன்விளை–திசையன்விளை, 15. எஸ்.ஏ.நோபிள் உயர்நிலைப்பள்ளி–வள்ளியூர், 16. விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–வள்ளியூர், 17. ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–ஆலங்குளம், 18. புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–ஆலங்குளம், 19. ரத்னா உயர்நிலைப்பள்ளி, முத்துக்கிருஷ்ணாபுரம்–கடையநல்லூர், 20. கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மங்களாபுரம் மெயின் ரோடு–கடையநல்லூர்.
21. ஏ.ஜி. மெட்ரிக் பள்ளி, பஸ்நிலையம் அருகில்–சுரண்டை, 22. ஏ.வி. உயர்நிலைப்பள்ளி–கீழப்பாவூர், 23. அரசு உயர்நிலைப்பள்ளி–மேல செங்கோட்டை, 24. வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி, தபால் நிலையம் அருகில்–செங்கோட்டை, 25. வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி–தென்காசி, 26. செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மெயின் ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில்–தென்காசி, 27. செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மெயின் ரோடு–புளியங்குடி, 28. நாடார் உறவின் முறை கமிட்டி காமராஜ் உயர்நிலைப்பள்ளி–வாசுதேவநல்லூர், 29. கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–திருவேங்கடம், 30. ரெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–திருவேங்கடம்.
31. அரசு மேல்நிலைப்பள்ளி–சுத்தமல்லி, 32. அரசு உயர்நிலைப்பள்ளி, மெயின் ரோடு–மானூர், 33. புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி–சேர்ந்தமங்கலம், 34. அரசு உயர்நிலைப்பள்ளி–தேவர்குளம், 35. காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி, மத்திய சிறைச்சாலை எதிர்புறம்–பாளையங்கோட்டை, 36. அரசு மேல்நிலைப்பள்ளி–ரெட்டியார்பட்டி, 37. சின்மயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி–பாளையங்கோட்டை, 38. பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி, மகாராஜநகர்–பாளையங்கோட்டை, 39. ஏ.வி. மேல்நிலைப்பள்ளி–சங்கரன்கோவில், 40. 36 கிராம சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளி–சங்கரன்கோவில், 41. மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி–நெல்லை டவுன், 42. அரசு மேல்நிலைப்பள்ளி, ரத்னா தியேட்டர் எதிர்புறம்–நெல்லை.
விண்ணப்பம் பெறப்படும் மையங்கள்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நெல்லை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் வருகிற 6–ந் தேதி முதல் 23–ந் தேதி வரையுள்ள நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை) தவிர திரும்ப பெறப்படும். விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும், மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கலாம்.
1. மாவட்ட கல்வி அலுவலகம், ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், புதிய பஸ்நிலையம் அருகில், தென்காசி.
2. மாவட்ட கல்வி அலுவலகம், சேரன்மாதேவி (இருப்பு) திருநெல்வேலி, ரத்னா தியேட்டர் எதிர்புறம், சுவாமி சன்னதி ரோடு, நெல்லை டவுன்.
3. மாவட்ட கல்வி அலுவலகம், ரத்னா தியேட்டர் எதிர்புறம், சுவாமி சன்னதி ரோடு, நெல்லை டவுன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.