மானிய விலையில் கால்நடைகளுக்கு வைக்கோல் வழங்கும் திட்டம்
மானிய விலையில் கால்நடைகளுக்கு வைக்கோல் வழங்கும் திட்டத்தை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.
வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாள்தோறும் ஏராளமான கால்நடைகள் இறந்து வருகின்றன. இதனிடையே வறட்சியால் பாதிக்கப்பட்ட மாயார் பகுதியை மாவட்ட கலெக்டர் சங்கர் நேற்று ஆய்வு செய்தார்.
மானிய விலையில் வைக்கோலஇதையடுத்து, கால்நடை பராமரிப்பு துறை மூலம் மானிய விலையில் வைக்கோல் வழங்கும் திட்டத்தை கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் கால்நடைகளுக்கு மானிய விலையில் வைக்கோல வழங்கப்படுகிறது. அதன்படி வைக்கோல் ஒரு கட்டு ரூ.24–க்கு வாங்கி அதனை விவசாயிகளுக்கு ரூ.2 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாயாரில் தற்போது 90 பயனாளிகளுக்கு தலா 30 கிலோ எடை கொண்ட வைக்கோல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் படி ஒரு கால்நடைக்கு ஒரு நாளுக்கு 3 கிலோ வீதம் ஒரு வாரத்திற்கு மொத்தம் 21 கிலோ வைக்கோல் வழங்கப்படும். இந்த திட்டமானது கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.18 லட்சத்து 27 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாயாரில் வைக்கோல் புல் வழங்கியது போல மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மற்ற பகுதிகளிலும் நாளை (இன்று) முதல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ரங்கசாமி, துணை இயக்குனர் எட்வின் ஜார்ஜ், உதவி இயக்குனர் ஜான்சன் மற்றும் மசினகுடி கால்நடை பராமரிப்பு நிலைய டாக்டர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.