ஈரோட்டில் நீதிக்காக குரல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் நீதிக்காக குரல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 3:15 AM IST (Updated: 2 March 2017 6:48 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் நடந்த படுகொலைகளை கண்டித்து நீதிக்காக குரல் அமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிக்காக குரல் அமைப்பின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம

ஈரோடு,

கேரள மாநிலத்தில் நடந்த படுகொலைகளை கண்டித்து நீதிக்காக குரல் அமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிக்காக குரல் அமைப்பின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன், விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் மாநில அமைப்பாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கேரள கம்யூனிஸ்டு அரசை கண்டித்தும், படுகொலைகள் செய்யப்பட்டதை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நீதிக்காக குரல் அமைப்பின் ஈரோடு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், சக்திமுருகேஷ், இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் குருசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அசோக்குமார், பா.ஜ.க. மாவட்ட செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story