செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 2 March 2017 3:00 AM IST (Updated: 2 March 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. நேற்று இந்த கோபுரம் மீது, அதே பகுதியை சேர்ந்த சிவராமன் மகன் சரவணன்(வயது 27) என்பவர் ஏறினார். பின்னர் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்தவர், இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் செல்போன் கோபுரம் மீது ஏறிய வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர்.

பின்னர் சரவணனிடம் நடத்திய விசாரணையில், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவருக்கும் இடையே சொத்துப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தனது சொத்தை மீட்டு தருமாறு கூறி அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story