பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது
அபிராமம் சப்–இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது
அப்போது அந்த வழியாக பணிமுடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அபிராமம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரான கீழ்க்குடி சுப்பிரமணியன் அந்த கும்பலை பார்த்து விசாரித்தபோது அவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் அவரிடம் இருந்த மோதிரம், மோட்டார் சைக்கிள், கடிகாரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது. மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிவசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமுதி பசும்பொன்நகர் சப்பானி முருகேசன்(28), கே.வேப்பங்குளம் துரைபாண்டி (26), மதுரை வில்லாபுரம் உலகநாதன் மகன் ஞானவேல்பாண்டியன் (25), பம்மனேந்தல் பெரியசேர்வை மகன் ரவி சண்முகம்(22), மதுரை கீரைத்துறை திருமூர்த்தி(28), கமுதி புதுக்கோட்டை முத்துராமலிங்கம்(28), வில்லாபுரம் குரங்கு முத்துராமலிங்கம்(22), கருத்தறிவான் தொப்புளிமுனியசாமி(24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 2006–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பரமக்குடி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் சிலர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இவ்வாறு ஆஜராகாமல் இருந்த மதுரை வில்லாபுரம் உலகநாதன் மகன் ஞானவேல் பாண்டியனுக்கு பரமக்குடி கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
கைதுவழக்கமாக குற்ற வழக்கில் ஜாமீனில் வெளியே செல்லும் குற்றவாளி பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதபோது வாரண்டு பிறப்பிக்கப்படுவதும், அதன்பின்னர் கோர்ட்டில் ஆஜரானதும் பிடிவாரண்டு விலக்கப்பட்டு ஜாமீன் தளர்வின்படி மீண்டும் வெளியில் சென்றுவிடுவதும் வழக்கம். இதனை தவிர்க்கும் வகையில் மாவட்டத்தில் முதன்முறையாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த ஞானவேல்பாண்டியன் மீது 229(ஏ) என்ற புதிய பிரிவின் கீழ் அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளி பிடிபட்டாலோ, நேரில் ஆஜரானாலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். வழக்கு விசாரணை முடியும் வரை மீண்டும் ஜாமீனில் வெளியே வரமுடியாது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஞானவேல்பாண்டியனை கைது செய்தனர்.