மதுபானக்கடையில் “ஸ்டிக்கர்” ஒட்டும் போராட்டம் பா.ம.க. சார்பில் நடந்தது
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாததை கண்டித்து கும்பகோணத்தில் பா.ம.க. சார்பில் மதுபானக் கடையில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்,
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை வருகிற 31-ந்தேதிக்குள் மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் கும்பகோணம் நகரப்பகுதிகளில் கொட்டையூா், ஆழ்வான் கோவில்தெரு மற்றும் கரூப்பூா், அசூா் புறவழிச்சாலைகள், விளந்த கண்டம், திருநீலக்குடி, நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளா் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதில் வன்னியா் சங்க மாநில துணை தலைவா் குமாா், பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவா் வாசு, முன்னாள் நகர செயலாளா் பாலகுரு, ஒன்றிய செயலாளா் குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Next Story