ரெயில் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம்: ரெயில்வே போலீசார் விசாரணையை தொடங்கினர்
சென்னை பழவந்தாங்கல்-பரங்கிமலை இடையே கடந்த மாதம் 23-ந்தேதி மின்சார ரெயிலில் பயணம் செய்த 3 வாலிபர்கள் சிக்னல் கம்பத்தில் அடிபட்டு உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னை பழவந்தாங்கல்-பரங்கிமலை இடையே கடந்த மாதம் 23-ந்தேதி மின்சார ரெயிலில் பயணம் செய்த 3 வாலிபர்கள் சிக்னல் கம்பத்தில் அடிபட்டு உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தெற்கு வட்டத்துக்குட்பட்ட ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் தலைமையில் சட்டப்பூர்வ விசாரணை நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் விபத்து குறித்து பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், “விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம். சம்பவத்தன்று பாதுகாப்பற்ற முறையில் படிகட்டுகளில் தொங்கியபடி வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர். இதற்கான கண்காணிப்பு கேமரா வீடியோ ஆதாரங்களை விசாரணை அதிகாரி முன்பாக சமர்ப்பித்துள்ளோம்” என கூறினார்.
இதற்கிடையே விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் பாதுகாப்பு கமிஷனரை நேரில் சந்தித்து விபத்து தொடர்பாக தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story