மதுபான கடையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் பா.ம.க.வினர் 10 பேர் கைது

திருச்சி,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்தநிலையில் இந்த உத்தரவை மீறி திருச்சியில் பல இடங்களில் மதுபான கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அவ்வாறு செயல்பட்டு வரும் ஒரு கடையின் மீது ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பா.ம.க.வினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை திருச்சி கருமண்டபம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசா, புறநகர் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர், ஷரீப்தீன், வினோத் உள்பட பலர் திரண்டு வந்து கடையின் முன்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்றனர். அப்போது அங்கு தயாராக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ஸ்டிக்கர் ஒட்ட வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 10 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அனைவரையும் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.

Next Story