ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட ஆலடிநகர் பகுதிக்கு மெயின்ரோடு சந்திப்பில் இருந்து சிமெண்டு தளம் போடப்பட்ட தெரு செல்கிறது. இந்த தெருவின் ஓரம் வெட்டவெளியில் இயற்கை உபாதை, சிறுநீர் கழிக்கப்படும் இடமாக மாறி உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலர் முருகன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். தொடர்ந்து அவர்கள், 11-வது வார்டு பகுதியில் வெட்ட வெளியில் இயற்கை உபாதை கழிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பேரூராட்சி அலுவலகம் முன் திடீரென பொதுமக்கள் திரண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story