சாலை விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி


சாலை விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

சாலை விபத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றம், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் இழப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள், விபத்து வழக்கு ஆவணங்களை எளிதில் பெறும் நோக்கில் அவற்றை போலீஸ் துறையினர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை போலீஸ் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இணையதளம் மூலம்...

மார்ச் 1-ந்தேதிக்கு (நேற்று) பிறகு பதிவு செய்யப்படும் விபத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை போலீஸ் இணையதளம் மூலம் பொதுமக்கள் பயன்பெறலாம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story