திருமானூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா


திருமானூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 2 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

திருமானூரில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜான் வின்சென்ட் ராஜா தலைமையில், செந்தமிழ்செல்வன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலையில் புத்தாடை மற்றும் பழங்கள், ரொட்டி பாக்கெட் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இலக்கியதாசன், முருகன், செல்வபிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிவண்ணன், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story