திருவெறும்பூர் அருகே சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சூரியபிரபை, சந்திரபிரபை, சிம்ம வாகனம் என பெருமாள் பாய்லர் ஆலை வளாக பகுதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தேரில் பத்மாவதி சமேத சீனிவாசபெருமாள் எழுந்தருளினார். பாய்லர் ஆலை செயலாண்மை இயக்குனர் ஆர்.ராஜாமனோகர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் தேர் நிலைக்கு வந்தது. நேற்று மாலை கூத்தைப்பார் முட்டத்தி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
புஷ்ப பல்லக்கு
இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) 81 கவச திருமஞ்சனம் சாற்று மறையுடனும், கொடியிறக்கத்துடனும் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மூலவர் உற்சவர் சேர்த்தி திருமஞ்சனமும், புஷ்ப பல்லக்கும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வெங்கடாஜலபதி சேவா சமதி செயலாளர் முரளி தலைமையில் துணைத்தலைவர் எஸ்.மனோகரன், எம்.பழனிவேல், டி.சேகர், குருசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story