நாமக்கல் தேவாலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை


நாமக்கல் தேவாலயங்களில் சாம்பல் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 March 2017 2:24 AM IST (Updated: 2 March 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சாம்பல் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாமக்கல்,


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

அதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமை ஆகும். இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

பிரார்த்தனை


அந்த வகையில் நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை பாதிரியார் பிரான்சிஸ் நடத்தினார். பிரார்த்தனை முடிந்ததும் அவர் சாம்பலால் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வைத்தார். மேலும் சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு நேற்று நாமக்கல் சி.எஸ்.ஐ. சர்ச், பெந்தேகோஸ்தே தேவாலயம் என அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இதேபோல நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சாம்பல் புதன்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story