6 இடங்களில் மதுபான கடைகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் பா.ம.க.வினர் 101 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் மதுபான கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 101 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்,

‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சாலையோரம் உள்ள மதுபான கடைகள் அகற்றப்படாமல் இருப்பதை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டும் வகையில் மதுபான கடைகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம் நேற்று பா.ம.க. சார்பில் பல்வேறு இடங்களில் நடந்தது. நாமக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள மதுபான கடை முன்பு நகர பா.ம.க. நிர்வாகி துரைசாமி தலைமையில் சிலர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளின் பெயர் பலகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டிப்பலகை என்ற வாசகங்கள் அடங்கி சுவரொட்டிகளை பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஒட்ட முயன்ற 11 பேரை பரமத்தி வேலூர் போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்
ராசிபுரம் டவுன் அண்ணாசலை தனியார் சூப்பர் மார்க்கெட் அருகில் உள்ள மதுபானக் கடையை மூடக்கோரி, மதுபான கடை முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி ஆலோசகர் வக்கீல் நல்வினை விஸ்வராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், நகர செயலாளர் சுரேஷ், நகர தலைவர் மணிகண்டன், நகர துணை செயலாளர் வாஞ்சிநாதன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கடை முன்பு சட்டவிரோத மதுபான கடை வழிகாட்டி பலகை என்ற பெயரில் ஸ்டிக்கரை ஒட்டினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மோகன்ராஜ் மற்றும் பா.ம.க.வினர் 14 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை, மங்களபுரம்
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள மங்களபுரத்தில் உள்ள மதுபான கடை முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ச.வடிவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் பொன்.முருகேசன், பெரியசாமி, முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார் (மேற்கு), சிவக்குமார் (கிழக்கு) ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டம் நடத்திய 2 பெண்கள், 17 ஆண்கள் என 19 பேரை மங்களபுரம் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நாமகிரிபேட்டையில் மதுபான கடை முன்பு நாமகிரிப்பேட்டை பேரூர் பா.ம.க. தலைவர் அம்மையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட 15 பேரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்–குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தெற்குப்பாளையம் பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்றக்கோரியும் பெயர் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மறைக்க முயன்றும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட முன்னாள் தலைவர் பாலு தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட துணை செயலாளர் கணேஷ், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தங்கராசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, பழனியப்பன், சேட்டு, ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, துரை, பாண்டியன், கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பா.ம.க.வினரை கைது செய்தார்.
இதேபோல குமாரபாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த போராட்டத்தில் 24 பெண்கள் உள்பட மொத்தம் 101 பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story