கிருஷ்ணகிரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு


கிருஷ்ணகிரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் பங்கேற்பு

கிருஷ்ணகிரி,


பா.ம.க. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் தேவராசன், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கணேசன், உழவர் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் திருப்பதி கவுண்டர், மாநில செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம் (கிழக்கு), அருண்ராஜன் (மேற்கு), முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் அங்குத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Next Story