சேலம் புதிய பஸ்நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

சேலம்,
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாவ ட்ட செய்தி–மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி 2 நாட்கள் நடத்தப்படுகிறது. இதன் தொ டக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சம்பத் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா ஆடுகள் மற்றும் கறவைமாடுகள், விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம், அம்மா குடிநீர், அம்மா குழந்தைகள் நல பெட்டகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிநவீன வீடியோ வாகனத்தின் மூலம் தமிழக அரசின் சாதனை குறித்த வீடியோ படக்காட்சி நடத்தப்பட்டது. இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Next Story