சேலத்தில் டாஸ்மாக் கடையில் பா.ம.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டனர்
சேலத்தில் டாஸ்மாக் கடையில் பா.ம.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தினர். அதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
சேலம்,
டாஸ்மாக் கடை
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, அந்தந்த கடைகளின் டாஸ்மாக் பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் பா.ம.க. சார்பில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சேலம் பெரமனூர் மெயின் ரோட்டில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி கடையின் பெயர் பலகை மீது ‘சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டி பலகை‘ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்திற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமையில் கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர்.
முற்றுகை
அதையொட்டி அங்கு போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் டாஸ்மாக் பெயர் பலகையின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வந்த பா.ம.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க.வினர் கடையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து மாநில துணை பொதுச்செயலாளர் அருள் கூறும் போது, ‘சேலம் மாவட்டத்தில் 257 டாஸ்மாக் கடைகளில் இதில் 201 கடைகள் சட்ட விதிமுறைக்கு புறம்பாக உள்ளது. தற்போது 28 கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளது. இந்த கடைகளை கிராம பகுதிகளில் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது. அங்கு டாஸ்மாக் கடைகள் வைத்தால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்‘ என்றார்.

Next Story