கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடந்தது.
நாகர்கோவில்,
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த 3–ம் நாள் அவர் உயிர்த்து எழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும், உயிர்ப்பு பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 16–ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அதற்கு முன்பாக இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பார்கள். இந்த தவக்காலத்தில் நோன்பிருந்து, ஏழை– எளியவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்வார்கள். இந்த நாட்களில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.
சிலுவை அடையாளம்
கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திலும் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை– திருப்பலி நேற்று காலையில் நடந்தது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கினார். ஆயர் செயலாளர் அருட்பணியாளர் ராய், வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல், பங்குத்தந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை குரூஸ் கார்மல், அருட்பணியாளர்கள் பெஸ்கி, அருள்ராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.
திருப்பலியில், ஆயர் மற்றும் பங்குத் தந்தையர்கள் உள்ளிட்ட அருட்பணியாளர்கள் ‘மனம் திரும்பு, நற்செய்தியை நம்பு’ என்று கூறி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் மூலம் சிலுவை அடையாளம் வரைந்தனர்.
இந்த திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் தின திருப்பலி நடைபெற்றன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர்.
சிலுவைப்பாதை
தவக்காலத்தையொட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை என்னும் வழிபாடு நடைபெற உள்ளது.
இதேபோல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நடைபெறுகிறது. மேலும் அன்பியங்களில் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலிகள் நடைபெற உள்ளன.

Next Story