ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் சென்னையில் மீண்டும் விசாரணை


ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் சென்னையில் மீண்டும் விசாரணை
x

சென்னையில் 2-ம் கட்டமாக நீதிபதி ராஜேஸ்வரன் நேற்று விசாரணையை தொடங்கினார்.

சென்னை,

சென்னையில் ஜனவரி 23-ந்தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம், நடுக்குப்பம் மீன்மார்க்கெட் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் அத்துமீறி பொதுமக்கள் மீதும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும் தடியடி நடத்தியதாக புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்கனவே சென்னையில் ஜல்லிக்கட்டு கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மதுரை அலங்காநல்லூரிலும் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் 2-ம் கட்டமாக நீதிபதி ராஜேஸ்வரன் நேற்று விசாரணையை தொடங்கினார். அம்பேத்கர் பாலம் அருகே உள்ள ரூதர்போர்டுபுரத்துக்கு சென்று அவர் விசாரணை நடத்தினார். அங்குள்ள பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். போலீசார் தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாக ஏராளமான ஆண்களும், பெண்களும் புகார் தெரிவித்தனர். 

Next Story