அம்பத்தூரில் கோவிலுக்கு சென்ற பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை


அம்பத்தூரில் கோவிலுக்கு சென்ற பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 March 2017 3:14 AM IST (Updated: 2 March 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 36). தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

ஆவடி,

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 36). தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை உமாமகேஸ்வரி மேனாம்பேடு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார். மேனாம்பேடு அருகே வந்தபோது தனக்கு தெரிந்த அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ் (32) என்பவருடன் காரில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கார் தாம்பரம் நோக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உமாமகேஸ்வரி தனது தம்பி ஸ்ரீதருக்கு போன் செய்து தான் கடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீதர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அம்பத்தூர் போலீசார் உமாமகேஸ்வரி மற்றும் பிரகாஷ் ஆகியோரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story