மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் படகு போட்டி நடத்த ஐகோர்ட்டு அனுமதி


மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் படகு போட்டி நடத்த ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 2 March 2017 3:34 AM IST (Updated: 2 March 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை சர்வதேச அளவில் மோட்டார் படகு போட்டி நடத்த தனியார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

மும்பை,

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை சர்வதேச அளவில் மோட்டார் படகு போட்டி நடத்த தனியார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு கடற்படை ஒத்துழைப்பு அளித்த போதிலும், நகர கலெக்டரும், மாநகராட்சி நிர்வாகமும் அனுமதி மறுத்தனர். எனவே, படகு போட்டி நடத்த அனுமதி கோரி ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.எம்.கன்னடே மற்றும் பி.ஆர்.போரா ஆகியோர், இதுபோன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், உலகமயமாதல் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வதால் என்ன பயன் என்பதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினர்.

மேலும், மராட்டியத்தின் எழில்மிகு கடற்கரைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மெரின் டிரைவ் கடற்கரையில் மோட்டார் படகு போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர். 

Next Story