தண்டவாள புதுமை வாகனம்


தண்டவாள புதுமை வாகனம்
x
தினத்தந்தி 2 March 2017 7:00 PM IST (Updated: 2 March 2017 12:42 PM IST)
t-max-icont-min-icon

சுவீடனைச் சேர்ந்த டலார்னா பல்கலைக்கழக மாணவர்கள் தண்டவாளத்தில் ரெயில்போல இயங்கும் புதிய வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

 அதன் வேகம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. டீம் எக்சிமஸ்-1 என்ற பெயரில் பந்தய கார் போன்ற பேட்டரி வாகனத்தை அந்த மாணவர்கள் குழு உருவாக்கி உள்ளது. தண்டவாளத்தில் இயங்கும் வகையில் இதற்கான சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்த மின்சக்தியில் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்டுள்ளது இந்த வாகனம்.

இதை பரிசோதித்துப் பார்ப்பதற்காக மின்சார மோட்டார் வாகனத்துடன் போட்டி நடத்தி சோதனை ஓட்டம் நடத்தினர். அப்போது 6 மாணவர்கள், ‘டீம் எக்சிமஸ்’ வாகனத்தில் ஏறி தண்டவாளத்தில் பயணித்தனர். எலக்ட்ரிக் வாகனம் சாலையில் பயணித்தது. இறுதியில் டீம் எக்சிமஸ் வாகனம் போட்டியில் முந்தியது.

ஒருவாட் மின்சாரத்தில், ஒரு மனிதரை 0.84 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் திறன் கொண்டது டீம் எக்சிமஸ் வாகனம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இது குறைந்த சக்தியில், நீண்ட தூர பயணத்தை சாத்தியமாக்குவதாக கருதப்படுவதால் மாணவர்கள் குழு உலக சாதனைக்காக உரிமை கோரி உள்ளனர். மேலும் போட்டியின் அடிப்படையில் இன்னும் பல மேம்பாடுகள் செய்து பயன்பாட்டிற்கு அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தண்டவாள பணிகளுக்கு உதவும் வாகனமாகவும், எதிர்காலத்தில் குறைந்த நபர்களை சுமந்து செல்லும் புதிய தண்டவாள பயணத்துக்கும் இந்த வாகனம் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.


Next Story