அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தீ மிதி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தீ மிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து இரவு நாடக நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story