பெரியகுனிச்சி ரே‌ஷன் கடையில் எம்.எல்.ஏ. ஆய்வு


பெரியகுனிச்சி ரே‌ஷன் கடையில் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2017 1:00 AM IST (Updated: 2 March 2017 7:54 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுனிச்சி ரே‌ஷன் கடைக்கு நேரில் சென்று ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

கந்திலி ஒன்றியம், பெரியகுனிச்சி ரே‌ஷன் கடையில் அரிசி, பருப்பு மற்றும் பொருட்கள் ஒரு நாட்கள் மட்டுமே வழங்குவதாக அப்பகுதி மக்கள் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. அந்த ரே‌ஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள விற்பனை அலுவலரிடம் அரிசி, பருப்பு, மண்எண்ணெய் வந்து இருக்கிறதா? ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் கு.ராஜமாணிக்கம், கே.எஸ்.அன்பழகன், நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story