அரக்கோணம் அருகே ரே‌ஷன் கடை திறப்பு விழா எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு


அரக்கோணம் அருகே ரே‌ஷன் கடை திறப்பு விழா எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 3 March 2017 1:30 AM IST (Updated: 2 March 2017 8:00 PM IST)
t-max-icont-min-icon

வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் புதிய ரே‌ஷன் கடை திறப்பு விழா நடந்தது

அரக்கோணம்,

அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரக்கோணம் அருகே உள்ள வடமாம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் புதிய ரே‌ஷன் கடை திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குருவராஜபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.எம்.நாகராஜன், மகளிர் குழு தலைவர் கீதாகுப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சீனிவாசன், தேவராஜ், குமார், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜி.நாகபூ‌ஷணம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோ.அரி எம்.பி., கலந்து கொண்டு ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரே‌ஷன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஜி.விஜயன், ஜெ.ஜீவன்சிங், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன், கடன் சங்க செயலாளர் சி.செல்வம், கட்சி நிர்வாகிகள் ஜி.பழனி, ஏ.எல்.நாகராஜன், சத்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடன் சங்க துணைத் தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.



Next Story