வடஅரசம்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


வடஅரசம்பட்டு கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 March 2017 2:15 AM IST (Updated: 2 March 2017 8:25 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 232 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் கடந்த 1–ந்தேதி தொடங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 232 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் கடந்த 1–ந்தேதி தொடங்கியது. முகாம் வருகிற 21–ந் தேதி வரை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை தாலுகா வடஅரசம்பட்டு கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கந்தசாமி தொடங்கி வைத்தார். கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தகுமார், ஆவின் துணை பதிவாளர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.


Next Story