நாமக்கல்லில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில் ரூ.45 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 3 March 2017 4:00 AM IST (Updated: 2 March 2017 11:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று 2,200 மூட்டை பருத்தி ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது.

நாமக்கல்,

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று சங்க தலைவர் தென்னரசு மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னிலையில் பருத்தி ஏலம் நடந்தது.

இந்த பருத்தி ஏலத்துக்கு நாமக்கல், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பவித்திரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 2,200 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.45 லட்சத்துக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ஏறத்தாழ ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 742 முதல் ரூ.6 ஆயிரத்து 609 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 509 முதல் ரூ.7 ஆயிரத்து 355 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 290 முதல் ரூ.8 ஆயிரத்து 120 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை கோவை, அவினாசி, திருப்பூர், திருச்செங்கோடு, கொங்கணாபுரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.


Next Story