டயர் வெடித்ததில் மினிலாரி கவிழ்ந்து 6 பேர் காயம்


டயர் வெடித்ததில் மினிலாரி கவிழ்ந்து 6 பேர் காயம்
x
தினத்தந்தி 2 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-02T23:48:32+05:30)

ஈரோடு சோலார் பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சமையல் தொழிலாளர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

 

வேடசந்தூர்,

ஈரோடு சோலார் பகுதியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சமையல் தொழிலாளர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மினி லாரியை மகேந்திரன் (வயது 30) என்பவர் ஓட்டினார். வேடசந்தூர் – திண்டுக்கல் 4 வழிச்சாலையில் லட்சுமணம்பட்டி என்னுமிடத்தில் வந்த போது மினி லாரியின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றி வந்த பாத்திரங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் ரோட்டில் சிதறின.

லாரியில் பயணம் செய்த சமையல் தொழிலாளர்கள் பரமசிவம் (25), செந்தில் (27), சுப்பிரமணி (30), ஜோதிமணி (25), ரெங்கம்மாள் (35), பரமேஸ்வரி (30) ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு லாரியில் கயிறு கட்டி கவிழ்ந்து கிடந்த மினி லாரியை அப்புறப்படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story