பாகூரில் மேலும் 2 சிலைகள் கண்டெடுப்பு அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு
பாகூரில் பெருமாள் சிலை கிடைத்த இடத்தில் மேலும் 2 சிலைகளை கிராம மக்கள் நேற்று கண்டெடுத்தனர். இந்த சிலைகளை அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
பாகூர்,
பெருமாள் சிலை
புதுவை மாநிலம் பாகூர் கோதண்டராமர் கோவில் அருகில் ஓய்வுபெற்ற பேராசிரியர் தில்லைவேங்கடம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் தோண்டப்பட்டது. பூமியில் சுமார் 5 அடி பள்ளம் தோண்டியபோது கருங்கல்லால் ஆன பெருமாள் சிலை ஒன்று படுக்கை நிலையில் தென்பட்டது. அது சுமார் 5 அடி உயரத்தில் இருந்தது.
தகவல் அறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அங்கு வந்து சிலையை பார்வையிட்டுச் சென்றனர். இதை அறிந்த பாகூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அங்கு வந்து பெருமாள் சிலைக்கு கற்பூரம் ஏற்றி, வழிபாடு நடத்தினர்.
மேலும் 2 சிலைகள் மீட்பு
இந்தநிலையில் பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்ததால் பெருமாள் சிலையை சுற்றி குவிந்திருந்த மண் பள்ளத்தில் சரிந்தது. இதை அப்பகுதி இளைஞர்கள் சரிசெய்தபோது, அந்த பகுதியில் மேலும் 2 சிலைகள் இருப்பது தெரியவந்தது. நேற்று காலை அந்த இடத்தில் கிராம மக்கள் திரண்டனர். படுக்கை நிலையில் இருந்த பெருமாள் சிலையை பள்ளத்தில் இருந்து மீட்டு, நிமிர்த்து வைத்தனர்.
அந்த சிலை கிடைத்த இடத்தின் பக்கவாட்டில் தோண்டிய போது ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய கற்சிலைகள் மற்றும் கல்லால் ஆன பீடம் ஆகியவை இருந்தன. இவற்றை கிராம மக்கள் மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர் பெருமாள் உள்பட 3 சிலைகளுக்கும் பால் அபிஷேகம் செய்து, பூக்களால் அலங் கரித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
தாசில்தாரிடம் வாக்குவாதம்
பெருமாள் சிலை கிடைத்த இடத்தில் மேலும் 2 சிலைகள் கிடைத்ததை அறிந்த தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பாகூருக்கு விரைந்து வந்து, சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் 3 சிலைகளையும் புதுவையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்ல இருப்பதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எங்கள் ஊரில் கிடைத்த சிலைகளை இங்கு வைத்தே வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும் என்று தாசில்தாரிடம் கிராம மக்கள் கூறினர். ஆனால் பூமிக்கு அடியில் கிடைத்த பொருட்கள் அரசுக்கு சொந்தம், சிலைகளை அருங்காட்சியகத்துக்கு எடுத்துச்செல்ல வழிவிடவேண்டும் என்று தாசில்தார் தெரிவித்தார். ஆனால் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சிலைகள் கிடைத்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் பார்வையிட்டார்
சாமி சிலைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, தனவேல் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று இரவு பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் சாமி சிலைகள் குறித்த விவரங்களை நாராயணசாமி கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள், எங்கள் ஊரிலேயே இந்த சிலைகளை வைத்து வழிபட கோவில் கட்டித்தரவேண்டும் என்று கூறினர். மக்கள் விருப்பப்படியே சாமி சிலைகளை இங்கேயே வைக்கவும், கோவில் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

Next Story