வகுப்பை புறக்கணித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

குளித்தலை,
ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் வகுப்பை புறக்கணித்து மாணவ- மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சதீஷ்குமார் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.

Next Story