குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
தமிழகத்தில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி செப்பனிடுவதற்காக அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் வறட்சி பணிகள் மற்றும் குடிநீர்த்திட்ட பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா நிறைவேற்றப்படாத நலத்திட்டங்களை அறிந்து அதற்கென தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து நலத்திட்டங்களும் ஏழை, எளிய மக்களை சென்றடைய வழிவகை செய்துள்ளார். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களை சென்றடைய துறை சார்ந்த அலுவலர்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ.350 கோடி
தமிழகத்தில் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி செப்பனிடுவதற்காக அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வறட்சி ஏற்படும் காலங்களில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நன்கு சுத்தமான, சுகாதாரமான, குறைபாடு இல்லாத குடிநீர் வழங்கப்பட வேண்டும். 100 சதவீதம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைத்திடும் வகையில், போதுமான ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். அரசு திட்டத்தைப் பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த தொழில்கள் வளம் பெறும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மழைக்காலங்களில் மின்சாரம் தட்டுப்பாடின்றி மின்வினியோகத்தை ஒழுங்குபடுத்தி சீராக மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் மின்சாரம் கிடைத்திட மின்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி), தமிமுன் அன்சாரி (நாகை), உதவி கலெக்டர்கள் கண்ணன், சுபாநந்தினி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story