பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கொரடாச்சேரி ஒன்றிய பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், வீரமணி, விஜயா, ஒன்றிய பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
7-வது ஊதியக்குழு அமைத்ததோடு மட்டுமல்லாமல், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, நிர்வாகிகள் பாஸ்கரன், பெத்தபெருமாள், சதீஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய துணைச்செயலாளர் ஆரோக்கிய பேட்ரிக் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Next Story